நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு.. 95% பேர் மட்டுமே  எழுதினர்.. தேசிய தேர்வு முகமை.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

அந்த வகையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான 'நீட்' தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது‌. இந்த தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத விண்ணப்பித்தனர்.

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர். வழக்கம் போல, இந்த ஆண்டும் 'நீட்' தேர்வு கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றது.

இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை 95% பேர் தேர்வு எழுதியதாகவும் 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

95% students attend the NEET Exam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->