9 வயது சிறுமிக்கு மாரடைப்பு - மரணம்! நாட்டையே அதிரவைத்த சம்பவம்!
9 years old girl Death in Heart Attack UP
உத்திரபிரதேசத்தில் ஒன்பது வயது சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், லக்னோ பகுதியில் மூன்றாவது படிக்கக்கூடிய, ஒன்பது வயது மாணவி, பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு பலியானதாக சொல்லப்படுகிறது.
மான்ட்ஃபோர்ட் பள்ளியில், மான்விசிங் என்ற அந்த மாணவி தனது சக மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழவே, அவரை மீட்ட ஆசிரியர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் குற்றம் தாட்டி உள்ளனர்.
இதற்கிடையே சிறுமி உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. சிறுமியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
English Summary
9 years old girl Death in Heart Attack UP