தலையில் பந்து வீச்சால் காயம் – 9 வயது சிறுவன் உயிரிழப்பு!
9 year old boy dies after being hit in the head by a ball
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்காராவ் பள்ளி மாணவன் அஸ்வித் ரெட்டி (வயது 9) கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன்போது ஒரு மாணவன் வீசிய பந்து நேராக அஸ்வித் ரெட்டியின் தலையில் பலமாக பட்டது.
மறுநாள் பள்ளிக்கு சென்ற அஸ்வித்திற்கு கடும் தலைவலி ஏற்பட்டது. உடனே அவரை பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவ பரிசோதனையில், அவரது தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்தும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. நேற்று (மார்ச் 28) அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
9 year old boy dies after being hit in the head by a ball