குடியுரிமைச் சிக்கல்: இந்தியா - வங்கதேச எல்லையில் தவிக்கும் 9 பேர்; கொடி அமர்வு கூட்டத்திலும் முடிவில்லை!
9 Stranded at India Bangladesh Border Amid Citizenship Dispute Flag Meeting Inconclusive
இந்தியா மற்றும் வங்கதேச எல்லைக்கு இடைப்பட்ட "நோ-மேன்ஸ் லேண்ட்" (No man's land) பகுதியில், தங்களின் குடியுரிமை என்னவென்று உறுதிப்படுத்தப்படாத காரணத்தால் 9 நபர்கள் இரு நாடுகளுக்குள்ளும் நுழைய முடியாமல் பரிதவித்து வரும் சம்பவம் எல்லையோரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைப் படையினரின் முட்டுக்கட்டை
அசாம் மாநிலத்தின் தெற்கு சல்மாரா-மன்கச்சார் மாவட்ட எல்லைப் பகுதியில் இந்த மனிதாபிமானச் சிக்கல் அரங்கேறியுள்ளது. வங்கதேசப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 9 பேரை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், அவர்களை வந்த வழியே தங்களின் நாட்டுக்கே திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், அவர்களைத் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க வங்கதேச எல்லைக் காவல் படை (BGB) திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. பிஎஸ்எஃப்-இன் கோரிக்கையை நிராகரித்துள்ள பிஜிபி, அந்த 9 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான எவ்வித முறையான ஆதாரமும் இல்லை என்று வாதிடுகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையோரக் காவல் படைகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது.
தோல்வியில் முடிந்த கொடி அமர்வு கூட்டம்
மன்கச்சார் எல்லை பதற்றம்: கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த 9 பேரும் எல்லையின் நடுவே தவிப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மன்பச்சார் பகுதியில் உள்ள இந்திய-வங்கதேச எல்லையில் திடீர் பதற்றம் தொற்றிக்கொண்டது.
இணக்கமற்ற பேச்சுவார்த்தை: இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் (BSF) வங்கதேச எல்லைக் காவல் படைக்கும் (BGB) இடையே அவசர 'கொடி அமர்வு கூட்டம்' (Flag meeting) நடத்தப்பட்டது. ஆனால், இருதரப்பு விவாதங்களின் முடிவிலும் எந்தவொரு சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சமூக வலைதள வீடியோக்கள்: தற்பொழுது எல்லைப் பகுதியில் சிக்கியுள்ளவர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அதில் ஒரு வீடியோவில், தவித்துக் கொண்டிருக்கும் நபர்களில் ஒருவர், தாங்கள் வங்கதேச குடிமக்கள் என்றும், கூலி வேலைக்காக மட்டுமே இந்தியாவிற்குள் வந்ததாகவும் ஒப்புக்கொள்வது தெளிவாகக் கேட்கிறது. தங்களின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் அவர்கள் எல்லையிலேயே கதறி அழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
English Summary
9 Stranded at India Bangladesh Border Amid Citizenship Dispute Flag Meeting Inconclusive