60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் - மீட்பு பணிகள் தீவிரம் - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள லேட்டரி தாலுகாவிற்குட்பட்ட கெர்கேடி பத்தர் கிராமத்தில் காலை 11 மணியளவில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து இந்த சம்பவம் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மூன்று மாநில மீட்பு படை குழுவினரும் தொடர்ந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து விதிஷா மாவட்ட கலெக்டர் உமாசங்கர் பார்கவா கூறுகையில், தற்போது சிறுவன் 49 அடி ஆழத்தில் சிக்கி உள்ளதாகவும், இதுவரை 34 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் சிறுவன் மீட்கப்படுவான். தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்படுகிறது மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 year old boy falls into 60 feet borewell in madhya pradesh rescue ops underway


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->