நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு.. 75 ரூபாய் நாணயம் அறிமுகம் - மத்திய அரசு அறிவிப்பு.!
75 ruppes coin introduce on parliament opening day
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை முன்னிட்டு மத்திய அரசு 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளது.

அந்த வகையில் 35 கிராம் எடை கொண்ட 75 ரூபாய் நாணயம் 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் ஜிங்க் கலவை கொண்டு உருவாக்கப்படுகிறது.
இந்த புதிய நாணயத்தின் ஒரு புறம் அசோக சின்னமும், அதன் கீழே சத்தியமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம் பெறுகிறது. இடது புறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகரிலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலது புறமாக இடம்பெறுகிறது. இந்த நாணயத்தின் மற்றொரு புறத்தில் நாடாளுமன்ற கட்டிடத்தின் படம் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
75 ruppes coin introduce on parliament opening day