30 வயது பெண்ணை திருமணம் செய்த 60 வயது முதியவர்! வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் (வயது 60) 30 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சிக்கபள்ளாப்பூர், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏரண்ணா (வயது 60) இவரது மனைவி சமீபத்தில் உயிரிழந்து விட்டார். இதனால் இவரை மகனும், மகளும் கவனிக்க மறுத்துவிட்டனர். 

இவர் அதிக அளவில் நிலம் வைத்துள்ளதால் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்து வரன் தேடி வந்துள்ளார். மராட்டிய மாநிலம் சோலாபூரைச் சேர்ந்த அனுஸ்ரீ (வயது 30) என்ற பெண் திருமணமான நிலையில் கணவரை விட்டு பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். 

இவரை ஏரண்ணாவுக்கு பிடித்துப் போனதால் அனுஸ்ரீயின் குடும்பத்தாரிடம் சென்று பெண் கேட்டுள்ளார். அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்பந்தம் தெரிவித்து ஒரு கோவிலில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடத்தி வைத்தனர். 

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த பலரும், வயதானதால் திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம் எனவும் வயதுக்கேற்ப வேறொரு பெண்ணை திருமணம் செய்து இருக்கலாம் எனவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

60 year old man married 30 year old girl


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->