சகோதரியை தனிமையில் சந்தித்த காதலன்.! கண்டுகொண்ட சகோதரனுக்கு ஏற்பட்ட விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


தனது சகோதரி அவருடைய காதலனுடன் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்த ஆறுவயது சிறுவனை அந்த சகோதரியின் காதலன் கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் இத்ஜாகிர் என்னும் கிராமத்தில் ஒரு பதினைந்து வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலிப்பதால் அடிக்கடி தனிமையில் ஒன்றாக சந்தித்து கூடிக் குலாவி வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அந்தக் காதலன் தனது காதலியான சிறுமியை தனிமையில் சந்திக்க பெற்றோர் இல்லாத நேரமாகப் பார்த்து அவர்களுடைய வீட்டிற்கு சென்றுள்ளான். இருவரும் தனிமையில் சந்தித்து கொஞ்சி குலாவி கொண்டு இருக்கையில் அந்த பெண்ணின் ஆறு வயது தம்பி இதனை நேரில் பார்த்து விட்டான். 

எனவே, அதிர்ச்சி அடைந்த காதலன் இவன் உயிருடன் இருந்தால் நம்முடைய ரகசியத்தை வெளியில் கூறி விடுவான் என்று தனது காதலியிடம் தெரிவித்துள்ளான். இதனால், அவனை கொலை செய்ய முடிவு செய்த காதலன் அருகில் அழைத்து சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றான். 

அதன் பின் பெண்ணின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து கேட்டபோது தம்பி வீட்டின் மேல் இருந்து கீழே தவறி விழுந்து மயக்கம் ஆகிவிட்டான் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பதறிப்போன பெற்றோர்கள் சிறுவனை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என்று தெரிவித்துள்ளனர். 

அதன் பின்னர், சில நாட்களில் குற்ற உணர்வு மேலோங்க அந்தப் பெண் தனது தம்பியை கொலை செய்தது தனது காதலன் தான் என்ற உண்மையை பெற்றோரிடம் கூறி விட்டார். இதனால், திடுக்கிட்டு பெற்றோர் அவருடைய காதலன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 years boy killed by his sister's boyfriend 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->