மும்பை உள்ளிட்ட 28 மாநகராட்சிகளின் தேர்தல்கள்; 50 சதவீத வாக்குப்பதிவு..!
50 percent voter turnout in the elections of 28 municipal corporations including Mumbai
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட 28 மாநராட்சிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 05.30 மணிக்கு நிறைவுற்றது. 46 முதல் 50 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ள நிலையில், பின்னர் சரியான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றப் போது 55.53 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல் முறையாக தேர்தலை சந்தித்த ஜால்னா மற்றும் இசால்கராஞ்சி மாநகராட்சிகளில் 56.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் கையில் வைக்கப்பட்ட மை எளிதாக அழிந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கும், தாக்கரே சகோதரர்களுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. 227 கவுன்சிலர் இடங்களை கொண்ட மும்பை மாநகராட்சி தேர்தலில் 1700 பேர் போட்டியிட்டுள்ளனர். 04 வருடத்திற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டிய தேர்தல், தற்போது நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, மும்பை மாநகராட்சிக்கு 09 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
English Summary
50 percent voter turnout in the elections of 28 municipal corporations including Mumbai