ஒமிக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் உடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!! - Seithipunal
Seithipunal


கடந்த 11 ம் தேதி  ஆப்ரிக்காவில் புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்க்கு ஒமிக்ரான் என பெயரிட்டுள்ளனர். ஒமிக்ரான் என்ற இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.  இந்த வைரஸ் ஸ்பைக் புரோட்டினில் 32 வகைகளில் உருமாற்றம் அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், மாலவி, லெசோதோ ஆகிய நாடுகளில் 100 மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், உலக நாடுகள் விமானநிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளன.

இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு வந்த 60 வயது உடைய ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பெங்களூரை சேர்ந்த 46 வயதுடைய மற்றொரு நபருக்கும் ஒமிக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. 

இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், ஒமிக்ரான் பாதித்த பெங்களூரை சேர்ந்தவருடன் தொடர்பில் இருந்த 218 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 5 பேருக்கு காரோண தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதாக உள்ளதா என்பதை கண்டறியும் பொருட்டு மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 corona test positive in cantact with omicron positive people


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->