பயணி ஒருவர் நூதன முறையில் கொண்டு வந்த 48 கொடிய விஷப் பாம்புகள், 05 ஆமைகள்: மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த பயணியிடமிருந்து 48 கொடிய விஷப் பாம்புகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து ஒரு பயணி நேற்று இரவு மும்பை வந்திறங்கியுள்ளார். 

சந்தேகத்திற்கிடமான நிலையில் வந்த அந்த பயணியை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, அந்த பயணியின் உடமைகளை பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது அவரது உடமைகளில் 48 விஷ பாம்புகள் மற்றும் 05 ஆமைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளது. இதனால் சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, வனவிலங்கு நல சங்க குழுவினர் உதவியுடன் விஷ பாம்புகள் குறித்த இனங்களை அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், வனவிலங்கு பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி, ஊர்வனவற்றை அவை கொண்டு வரப்பட்ட நாட்டிற்கு திருப்பி அனுப்ப, வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

48 deadly poisonous snakes and 05 turtles seized by a passenger at Mumbai airport


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->