திடீரென இடிந்து விழுந்த பள்ளி பால்கனி - குழந்தைகளின் கதி என்ன?
40 students injured for school polcony collapse in uttar pradesh
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட நாற்பது குழந்தைகள் காயமடைந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினருடன் விரைந்துச் சென்று காயமடைந்த குழந்தைகளை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 5 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தனியார் பள்ளியில் காலை நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்துக்காக பெருமளவிலான மாணவர்கள் முதல் மாடி பால்கனியில் கூடியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்து குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
40 students injured for school polcony collapse in uttar pradesh