4 பேர் சேர்ந்து சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலத்தில் நான்கு பேர் சேர்ந்து சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்.

மராட்டிய மாநிலம் தாராஷிவ் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த விஜய் காட்கே(25) என்ற நபர் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். விஜய் காட்கே ஏற்கனவே பழக்கமானவர் என்பதால், அந்த சிறுமி அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

விஜய் காட்கேவுடன் அவர் வீட்டில் மேலும் 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்து தப்பித்த சிறுமி, தனக்கு நடந்த சம்பவத்தை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் இந்த புகாரின் அடிப்படையில்,  அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 4 பேரை கைது செய்தனர். அதே சமயம், முக்கிய குற்றவாளி விஜய் காட்கே தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 people gang rape the girl


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->