டெல்லியில் 30 விமானங்கள் தாமதம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


வட மாநிலங்களில் தற்போது குளிர் காலம் துவங்கி உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் இன்று காலை டெல்லி முழுவதும் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக போதிய வெளிச்சமின்மை நிலவுவதால் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களுக்கும் புறப்பட வேண்டிய 30 விமானங்கள் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு விமான நிலையத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 flights service affected in delhi for fog


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->