அரசுத்துறையில் அதிர்ச்சி .. மாதம் 15,000 சம்பளம் வாங்கிய அரசு ஊழியரிடம் ரூ.30 கோடி சொத்துக்கள் - அதிகாரிகள் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்கி வந்த அரசு ஊழியரிடம் இருந்து, ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் முன்னாள் எழுத்தராக பணியாற்றிய கலக்கப்பா நிடகுண்டியின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதாவது, 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம், 1 கிலோ தங்கம், மூன்றுக்கும் மேற்பட்ட கார், இருசக்கர வாகனங்கள், ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

இந்த சம்பவம் குறித்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்ததாவது, "அரசு ஊழியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

30 crores worthable propertys seized in government employee at karnataga


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->