காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.!
3 terrorists encounter in kashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பகல்காம் தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. அதில் ஒரு பகுதியாக பயங்கரவாதிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் கூட்டாக இணைந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசாரைத் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் திருப்பி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
நீண்ட நேரமாக அவர்களுக்கு இடையில் துப்பாக்கி சண்டை நடைபெற்று இருந்தது. "ஆபரேஷன் அகல்" என்ற பெயரில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் இந்த துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிப்பதற்காக அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
English Summary
3 terrorists encounter in kashmir