14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 200 பேர் ..விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
200 men accused of raping 14-year-old girl Shocking information in the investigation
14 வயது பள்ளி மாணவியை கடத்தி கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்காளதேசத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தேர்வில் தோல்வியுற்றதால் வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு பெண் அவரை கவர்ந்து சில நாட்கள் தங்க வைத்து, பின்னர் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தினார்.
முதலில் குஜராத் மாநிலத்திற்கு அழைத்துச் சென்று பருவமடைதற்கான ஊசி கட்டாயப்படுத்தி போடப்பட்டார். பின்னர், நதியாத் பகுதியில் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றபோது, மறுத்ததால் கம்பியால் சூடு வைத்து மிரட்டினர். அதன்பின் மும்பையில் வேறு நபரிடம் விற்கப்பட்ட அவர், நவி மும்பை, புனே, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்.

கடந்த மாதம் மகாராஷ்டிராவின் பல்கர் நகரில் உள்ள விடுதியில் இருந்து, என்.ஜி.ஓ. மற்றும் போலீசார் இணைந்து அவரை மீட்டனர். விசாரணையில், கடந்த 3 மாதங்களில் 200-க்கும் மேற்பட்டோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி அழுதபடி தெரிவித்தார்.தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
200 men accused of raping 14-year-old girl Shocking information in the investigation