பெண்ணை கற்பழித்து தீவைத்து எரித்த 2 வாலிபர்கள்..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிளபிட் மாவட்டம் மதோ தண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டுள்ள ஒரு கிராமத்தில் 17 வயது கொண்ட இளம்பெண் வசித்து வருகிறார். இவரது தந்தை ஒரு விவசாயி. இவர் கடந்த 7-ந்தேதி விவசாய வேலைக்காக வயலுக்கு சென்றுவிட்டார். 

இளம்பெண்ணின் தாயார் கடந்த சில நாட்களாக மற்றொரு கிராமத்தில் உள்ள தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். இதனால் இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்று மாலை வயலுக்கு சென்ற தந்தை வீட்டுக்கு திரும்பினார். வீட்டினுள்ளே இளம்பெண் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த தந்தை அதிர்ச்சியடைந்தார்.

தந்தை உடனடியாக, மகளை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்ற பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பிலிபட் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட அவரது உடலில் 80 சதவீத தீக்காயங்கள் இருந்தது. இதை பார்த்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து அவருக்கு  சிகிச்சை அளித்து வந்தனர். இதுகுறித்து, மதோதண்டா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பியதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது 2 வாலிபர்கள் தன்னை கற்பழித்துவிட்டு தீவைத்து எரித்ததாக தெரிவித்தார். இதை கேட்டதும் இளம்பெண்ணின் பெற்றோரும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.  கடந்த 7-ந்தேதி இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது மதியம் 2.30 மணியளவில் 25 வயதுடைய 2 வாலிபர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்து இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியதால், இளம்பெண் அவர்களை போலீசில் பிடித்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் இளம்பெண்ணின் உடலில் கொடூரமாக தீவைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த தகவலை இளம்பெண் போலீசிடம் தெரிவித்தார். இளம்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பும் வரை அவர் கற்பழிக்கப்பட்ட தகவல் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தெரியவில்லை. 

இதைத்தொடர்ந்து, போலீசார், 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இளம்பெண் லக்னோவில் உள்ள கிங்ஜார்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். 

இந்நிலையில், பரேலி மண்டல ஐஜி ரமித் சர்மா, போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் பிரபு ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சோதனை செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளம்பெண்ணையும் பார்த்து வந்தனர். மேலும், இளம்பெண்ணை கற்பழித்து எரித்த 2 வாலிபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 youths raped woman and set fire


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal