மேடையில் நடைபெற்ற நாடக நிகழ்ச்சி! மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட 18 குழந்தைகள்! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் நாடகம் மேடையில் மின்சாரம் தாக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கஞ்ச மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. நாடக நிகழ்ச்சியைகாணஅருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த பலர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. நாடகம் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.

இதற்காக அங்கு இரும்பு தகடுகளை கொண்டு மேடை அமைக்கப்பட்டு வண்ணவண்ண மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. பல மணிநேரம் நடைபெற்ற நாடக நிகழ்ச்சி முடிந்ததும் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் மேடையில் எறி  விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மழையும் பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென நாடக மேடையில் மின்சாரம் பாய்ந்து இதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 18 குழந்தைகள் தூக்கி வீசப்பட்டதை அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை காப்பாற்ற முயனற்றுள்ளனர்.

அவர்களை மீட்க முயற்சித்த குதியைச் சேர்ந்த பெரியவர்கள் இருவரும் காயம் அடைந்தனர். குழந்தைகள் உட்பட 20 பேரும்  சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடகம் மேடையில் மின்சாரம் தாக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

18 children injured in Odisha drama stage electrocution


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->