கர்நாடகத்தில் அதிர்ச்சி: 100 பெண்களை பலாத்காரம் செய்து கொன்று கோவில் நிலத்தில் புதைப்பு?  - Seithipunal
Seithipunal


பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 100 பெண்களை கொன்று கோவில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக கர்நாடக மாநிலத்தில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத சாமி கோவிலில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டு, உடல்கள் கோவில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜூலை 4-ம் தேதி, கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த புகாரில், 1998 முதல் 2014 வரை பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாகவும், தன்னை உடல்களை புதைக்க வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புகார்தாரரிடம் வாக்குமூலம் பெல்தங்காடி கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது. அதன்பின், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக பெண்கள் மேம்பாட்டு ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி, விசாரணை வேகப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வக்கீல்கள் சங்கம் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் தட்சிண கன்னடா எஸ்.பி. அருண் கூறியதாவது:புகார்தாரர் காணவில்லை; அவர் அளித்த தகவலின் அடிப்படையில் குழி தோண்டி உடல் எடுக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.சட்ட நடைமுறைகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்ரீம் கோர்ட்டில் மனு நிலுவையில் உள்ளது.பிணங்களை எடுக்கும் நாள், நேரம், விதிகள் அனைத்தையும் விசாரணை அதிகாரி தீர்மானிப்பார்.

மேலும்  புகார்தாரர் கூறிய தகவல் உண்மைக்கு புறம்பாக இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

100 women raped murdered buried in temple land in Karnataka


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->