அமலுக்கு வந்தது 10 ரூபாய் மதிய உணவு திட்டம், மக்களிடையே நல்ல வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற முடிந்த சட்டசபை தேர்தலின்போது 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என சிவசேனா வாக்குறுதி அளித்து இருந்தது. 

தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி தலைமைலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த கட்சி தனது கனவு திட்டமான ‘சிவ போஜன்’ என்ற பெயரில் 10 ரூபாய் மதிய உணவு திட்டத்தை நேற்று அமல்படுத்தியது.

குடியரசு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அமைச்சர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்திற்க்காக மாவட்ட தலைநகரங்களில் பிரத்யேக உணவகம் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்படி 2 சப்பாத்தி, 150 கிராம் அரிசி சாதம், 100 கிராம் காய்கறி கூட்டு, 100 கிராம் பருப்பு குழம்பு ஆகியவை பத்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு உணவகங்களில் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மலிவு விலை மதிய உணவு கிடைக்கும். முதற்கட்டமாக மும்பையில் 15 இடங்களிலும், பின்னர் மகாராஷ்ட்ரா மாநிலம் முழுவதும் சிவ்போஜன் உணவகம் தொடங்கப்படவுள்ளது.

இந்த உணவகங்களில் நாள்தோறும் குறைந்தபட்சம் 500 பேருக்காவது உணவு வழங்க வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இத்திட்டத்துக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 rupee food scheme announced by mumbai government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->