பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற BSF வீரர்… மனைவி கணவரை மீட்கக்கோரி உருக்கம்!
border security force BSF pakistan border Operation Sindoor
கடந்த மாதம் 23-ம் தேதி, பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஓய்வெடுக்க சென்ற அவர் மரத்தின் பின்னால் தெரியாமல் பாகிஸ்தான் எல்லையில் நுழைந்திருக்கலாம் என BSF அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த பூர்ணம் சாஹுவின் கைது குறித்து அவரது மனைவி ரஜனி மிகுந்த வருத்தத்தில் உள்ளார். ஏற்கனவே 7 மாத கர்ப்பமான அவர், "என் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலுள்ளார்; அவரின் கண்கள் கட்டப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. என்ன நடக்கப் போகிறது என தெரியவில்லை" என்று கூறினார்.
இதுதொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரஜனியுடன் நேரில் பேசினார். "உங்கள் கணவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என உறுதியளித்தார்.
ஆபரேஷன் சிந்தூரால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் சூழலில், ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று கண்ணீர் சிந்தினார்.
English Summary
border security force BSF pakistan border Operation Sindoor