இதய நோய் அபாயம் கொழுப்புகளை குறைக்கும் ஒற்றை மருந்து.! அன்றாடம் இதை சாப்பிடுங்கள்.!
wall nut control Heart attack issue
அன்றாடம் ஒரு கைப்பிடி வால்நட்ஸ் எடுத்துக் கொள்வதால் இதய நோய் அபாயம் குறைக்கப்படுகிறது. பருப்பு வகைகளில் ஒன்றாக வால்நட் இருக்கிறது. இதை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் இதய நோய் வருவதற்கான ஆபத்துகள் குறைக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த ஆய்வு முடிவில் அன்றாடம் வால்நட்டை சாப்பிடுவதால் உடலில் இருக்கும் கொழுப்புகள் கரைந்து நல்ல கொழுப்பாக மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பருமன் அதிகமாக இருக்கும் நபர்கள் 45 பேரை வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அவர்கள் ஆய்வு தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு டயட்டில் இருந்தனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்கு அதிக அளவில் வால்நட் சாப்பிட கொடுக்கப்பட்டது டயட்டில் இருந்ததைவிட வால்நட் சாப்பிடும் போது அவர்களது உடல் பருமணில் மாற்றம் ஏற்பட்டதை அவர்களை உணர்ந்துள்ளனர்.
சாப்பிடுவதை விட வால்நட்சில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அன்றாடம் ஒரு கைப்பிடி வால்நட் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை பாதி அளவாக குறைக்க கூடும். இதில், நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனால், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து நல்ல கொழுப்பின் அளவானது அதிகரிக்கக்கூடும்.
English Summary
wall nut control Heart attack issue