சிறுநீரகத்தை நாசமாக்கி ஆயுளை குறைக்கும் பழக்கங்கள்.. மக்களே உஷார்.!  - Seithipunal
Seithipunal


நாம் உயிர் வாழ முக்கிய காரணியாக செயல்படுவது சிறுநீரகம், பல வேலைகளை செய்யும் இந்த சிறுநீரகமானது. நாம் செய்யும் ஒரு சில தவறுகளால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விரைவில் செயலிழக்க துவங்கி விடுகிறது.

இதனால் ஆயுள் காலம் குறைகிறது. அப்படி சிறுநீரகத்தை பாதிக்க வைக்கும் சில தகவல்கள் குறித்து இதில் காணலாம்.

பலர் வேலையை கவனமாக செய்கிறேன் என்று தண்ணீர் குடிக்காமல் அலட்சியம் செய்து விடுவார்கள். உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அவர்களது கிட்னி பாதிக்கப்படும்.

சிலர் பயணம் நேரம் உள்ளிட்டவற்றின் போது சிறுநீரை அடக்கி வைப்பார்கள். இப்படி ஆபிஸ், பள்ளி, கல்லூரி உள்ளிட்டவற்றில் சிறுநீரை அடக்கி வைத்து அவதிப்படுவதால் இது கிட்னியை பாதிக்கும்.

மேலும் சிலருக்கு அதிகப்படியான உப்பு போட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனால், இந்த உப்பு கிட்னியை பாதிக்கும்.

அடுத்ததாக உடல் வலிக்கு நிவாரணி மருந்துகளை பலரும் எடுத்துக் கொள்வது கிட்னியை செயலிழக்கச் செய்யும் விஷயமாகும். 

அடுத்ததாக பலரும் மது மற்றும் புகைக்கு அடிமையாகி அதிக அளவில் மது அருந்துவது கிட்னியை பாதிக்கும் செயல். 

சிலர் விரதம் இருக்கிறேன் என்று கூறிக்கொண்டு அடிக்கடி பட்டினி கிடப்பார்கள். இதனால் அவர்களது கிட்னி செயலிழக்க துவங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

These Things are Very Danger For Kidney


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->