இவர்கள் எல்லாம் அன்னாசி பழத்தை தொடவே கூடாது.! அன்னாசிப்பழ நன்மை, தீமைகள்.!
these peoples dont eat annasi
நமது உடலை நாம் ஆரோக்கியத்துடன் பராமரிக்க இயற்கையான உணவுகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். அந்த வகையில், அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து காண்போம்.
அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் ப்ரோமெலைன் என்ற பொருளின் காரணமாக மூட்டு தேய்மான பிரச்சனையை சரி செய்கிறது. வைட்டமின் சி சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட் காரணமாக உடலின் நோயெதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது.இதனைப்போன்று உடலில் உள்ள காயங்கள் விரைவில் ஆறவும் உதவி செய்கிறது.
அன்னாசிபழத்தில் இருக்கும் கால்சியம் மற்றும் மக்னீசியம் காரணமாக எலும்புகளின் வலிமை அதிகரிக்கிறது. அதிகளவு இருக்கும் நார்ச்சத்துக்கள் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனையில் பெரும் உதவி செய்கிறது.
இன்றுள்ள இளம் தலைமுறை அதிகளவு உயர் இரத்த அழுத்தம் மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சனையால் அவதியுற்று வருகின்றனர். அன்னாசிபழத்தில் இருக்கும் பொட்டசியம் காரணமாக இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. கண்களுக்கு தேவையப்படும் வைட்டமின் ஏ சத்துக்களை அதிகளவு வழங்கி, கண்களின் ஆரோக்கியம், மாலைக்கண் நோய், பார்வை கோளாறு போன்ற பிரச்சனையை ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
அன்னாசிப்பழம் அதிகளவு சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இனி காணலாம்:
அன்னாசிபழத்தில் இருக்கும் சர்க்கரையானது, இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் அன்னாசிப்பழத்தை தவிர்ப்பது அல்லது குறைந்தளவு சாப்பிடுவது நல்லது. அன்னாசிப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் இருக்கும் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.
ஆண்டி பயாடிக்ஸ் மற்றும் வலிப்பு நோய்களுக்காக சிகிச்சை பெற்று வரும் பட்சத்தில், அன்னாசிப்பழத்தை தவிர்ப்பது நல்லது. அன்னாசிபழத்தில் இருக்கும் ப்ரோம்லைன், மருந்துகளுடன் வினை புரிந்து உடல் உபாதையை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
பழுக்காத அன்னாசிப்பழத்தை சாப்பிடும் பட்சத்தில் அல்லது சாறாக பருகும் பட்சத்தில் உடலில் நச்சுத்தன்மை ஏற்படலாம். இது கடுமையான வாந்திக்கும் வழிவகை செய்யும். அன்னாசிப்பழம் நமது பற்களில் அதிகளவு கரையை ஏற்படுத்தும். பற்களின் எனாமல் மீதும் எதிர்பாராத தாக்கம் ஏற்படும்.
பல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், அன்னாசிபழத்தை நீரில் கழுவி சாப்பிடலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிடும் பட்சத்தில், கருகலையவும் வாய்ப்புகள் உள்ளது. கர்ப்பகால துவக்கம் மற்றும் பிரசவ கட்டங்களில் அன்னாசிப்பழத்தை பெண்கள் உட்கொள்ளாமல் இருத்தல் நல்லது. முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
English Summary
these peoples dont eat annasi