இந்த பிரச்சனைகள் இருந்தால், உடனே குடிப்பதை நிறுத்துங்கள்.!  - Seithipunal
Seithipunal


தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையானது சிறிது சிறிதாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. பலர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அவர்கள் வாழ்க்கையை சீரழித்து கொண்டு இருக்கின்றனர். மதுவை ஒழிப்பதற்காக பல அரசியல் தலைவர்களும், பெண்களும் போராடிய வண்ணம் இருக்கின்றனர்.

ஆனாலும், தமிழகத்தில் மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது. பல இடங்களில் சூப்பர் மார்க்கெட் போல எலைட் கடைகளும் அதிகமாகி வருகின்றது. ஒரு பீர் தானே என நினைத்து இளைஞர்கள் ஆரம்பத்தில் குடிக்க ஆரம்பிக்கின்றனர். நாளடைவில் அவர்கள் மதுவிற்கு அடிமையாகும் நிலை ஏற்படுகின்றது.

மது அருந்துபவர்களுக்கு, முதலில் பாதிக்கப்படும் உறுப்பு கணையம் மற்றும் கல்லீரல் தான் தொடர்ந்து மது அருந்தினால் கணையம், கல்லீரல் சிறுநீரகம் உள்ளிட்டவை செயலிழக்க ஆரம்பிக்கும். ரத்த வாந்தி அல்லது வயிறு வீக்கம் இருந்தால் உடனடியாக இந்த பழக்கத்தை கைவிட்டுவிட வேண்டும்.

இல்லாவிட்டால் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும். அடுத்ததாக கல்லீரல் பழுதடைந்து விட்டதற்கான அறிகுறி வயிறு வீக்கம், வாய் குமட்டல், வயிறு லேசாக வலி போன்ற பிரச்சனைகள் தான். மது பழக்கத்தினால் பணம் மட்டும் அழியாது. நமது அடுத்த தலைமுறையும் இல்லாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

தற்போது அதிகப்படியான உயிரிழப்புகள் காரணமாக மது தான் இருக்கின்றது. இதனால், உங்களை மாய்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் உங்களை நம்பி வாழுகின்ற மனைவி, பிள்ளைகளையும் நடுரோட்டில் தவிக்க விடாதீர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

should stop drinking having those problems


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal