Quick டிப்ஸ்!தொண்டை குறித்த பிரச்சனைகள் நீங்க... என்ன செய்ய வேண்டும்?
Quick Tips What should you do to relieve throat problems
வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் பெற:
இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற மருத்துவ பண்புகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், தொண்டையில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வறட்டு இருமல் பிரச்சனையும் சரியாகிவிடும்.அதற்கு ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் இஞ்சி பவுடர், 1 சிட்டிகை பட்டைத் தூள் மற்றும் சிறிது கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் கழித்து வடிகட்டி, தினமும் குடியுங்கள்.

அடிநா சதை அழற்சி குணமாக:
ஒரு கட்டு நற்பதமான துளசி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.பின் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு, தட்டு கொண்டு 5 நிமிடம் மூடி வையுங்கள்.அடுத்து அதனை வடிகட்டி, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள்.இப்படி ஒரு வாரம் தினமும் குடித்து வந்தால், அடிநா சதை அழற்சி குணமாகும்.
English Summary
Quick Tips What should you do to relieve throat problems