நல்வேளை இருந்தால் நல்ல வேளை தான் உங்களுக்கு.!
nalvelai keerai special
நல்வேளை செடியில், இலை, விதை அனைத்துமே பயன்பாட்டுக்கு உரியவை. இதன் இலைகளைச் சமைத்து உண்ணலாம். பண்டைய காலங்களில் இது முக்கிய மருந்துப் பொருளாக இருந்திருக்கிறது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டவர்களுக்கு,
இதன் இலைகளைச் சமைத்து உணவுடன் சேர்த்து ண்ணக்கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். அதனால் தான் பண்டைய காலத்தில் பிரசவமான பெண்களுக்கும், போரில் தாக்குதலுக்கு உள்ளாகி, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டவர்களும் இந்தக் கீரையை உணவாக கொடுத்திருக்கிறார்கள்.
இதன் இலையை அரைத்து சாற்றை பிழிந்துவிட்டு, சக்கையை மட்டும் தலையில் வைத்து துணியால் இறுக்கிக் கட்டி வைத்தால், தலையில் கோத்துள்ள நீர் வெளியேறும்.
இருமல் தீர ஒரு பிடி நல்வேளை இலைகளை தேவையான அளவு உப்புடன் சேர்த்து அரைத்து பசையாக்கி சாப்பிட வேண்டும்
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்த நல்வேளைச் பூச்சாறு பத்து துளிகள் தாய்ப்பாலுடன் கலந்து முதலுதவி சிகிச்சையாக உள்ளுக் கொடுக்கலாம்
சீழ் கட்டிகள் உடைவதற்கு நல்வேளை இலையை அரைத்தோ அல்லது வதக்கியோ சீழ் கட்டிகள் மீது பற்றுப் போட வேண்டும்
குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், மார்பு சளி குணமாக நல்வேளைப் பூக்களை சேகரித்து கசக்கி, சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும்
குடல் தட்டைப் புழுக்களைக் கொல்ல நல்வேளை விதைகளை நெய் சேர்த்து வறுத்து அரைத்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறுவர்களுக்கு ½ கிராம் பெரியவர்களுக்கு 4 கிராம் என்கிற அளவில் காலை மாலை மூன்று நாள்கள் உள்ளுக்கு கொடுக்க வேண்டும் சிறிதளவு வெந்நீர் குடிக்கலாம் நான்காம் நாள் விளக்கெண்ணெய் ½ தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க பேதியாகி குடலின் தட்டைப் புழுக்கள் வெளியாகும்
இலை, கட்டியை உடைக்கும் மருந்தாகவும் உடல் தளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படும் விதை குடல் வாயுவைக் குணப்படுத்தவும், குடல் புழுக்களை வெளியேற்றவும், இசிவு நோயை கட்டுப்படுத்தவும் பயன்படும்
காது வலி குணமாக இலையை கசக்கிப் பிழிந்து சாறு 2 துளிகள் காதில்விட வேண்டும். புண்கள் குணமாக 10 கிராம் இலைகளை 100 மிலி நெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அதனைப் புண்களின் மீது பூச வேண்டும்