ஏராளமான சத்துக்கள் நிறைந்த ''முலாம்பழம்'' சாப்பிடுவதால் என்ன பயன்?
Mulampalam benefit in tamil
* முலாம் பழத்தில் வைட்டமின் சத்துகள் அதிக அளவில் உள்ளது. இந்த வைட்டமின் உடல் நலத்திற்கும், கண்பார்வை பெருகுவதற்கும் பயன்படுகிறது. முலாம்பழம் சாப்பிடுவதால் கண்ணில் உள்ள செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும். கண் வறண்டு விடாமல் பாதுகாக்கும்.
* கோடை காலங்களில் முலாம் பழத்தை அரைத்து பருகிவர உடல் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும்.

* உடலுக்கு தேவையான தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின், சத்து சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிக அளவில் உள்ளதால் அடிக்கடி முலாம்பழம் சாப்பிடுவது நல்லது.
* முலாம் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் ரத்த செல்கள் உறைவதை தடுத்து இதய சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கிறது.
* முலாம்பழத்தை பாலுடன் பனங்கற்கண்டு, குங்குமப்பூ சேர்த்து அரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முலாம்பழம் சாப்பிடுவதால் மூல நோய் குணமடையும்.

* நீர்க்கடுப்பு, அஜீரணக் கோளாறு போன்றவை குணமாகும். இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் தாது பொருட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* முலாம்பழம் கல்லீரல் கோளாறுகளை போக்கும். முலாம்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் தொண்டை புண் குணமாகும்.
English Summary
Mulampalam benefit in tamil