பிரசவத்திற்கு பின் ஏற்படும் சதையை குறைக்க வேண்டுமா? - Seithipunal
Seithipunal


பிரசவத்திற்கு பின் ஏற்படும் சதையை குறைக்க வேண்டுமா?

பொதுவாக பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு உடலை சரியாக கவனிப்பதில்லை. இதனால், பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரசவத்திற்கு பின் அடிவயிற்றைச் சுற்றி துணி கட்டாதவர்களுக்கும், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்று பெல்ட் போடாதவர்களுக்கும், வயிற்று பகுதியில் சதை அதிகமாக் காணப்படும்.

இந்த சதையை குறைப்பதற்கு பெண்கள் ஏராளமான வைத்தியம் செய்கின்றனர். ஒரு சிலர் இதனை அப்படியே விட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில், இந்த வயிற்று சதையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் : 

சின்ன வெங்காயம்
பசு நெய்
பனங்கற்கண்டு 

செய்முறை:-

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதி ஒரு கடாயை வைத்து சூடேறியதும் சிறிதளவு பசு நெய்யை ஊற்றவும். அதில், சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி ஆறவைக்கவும்.

பின்னர் அதனை மெழுகு போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில், பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை என்று இரண்டு வேலையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சதை குறையும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

medicine of weight loss after delivery


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->