உடல் எடையை குறைத்து, ரத்தத்தை தூய்மைப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்.!
Medicinal benefits of Ponnankanni keerai
பொன்னாங்கண்ணிக் கீரையை மிளகும் உப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு சின்ன வெங்காயம் பூண்டு மிளகுத்தூள் சீரகம் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டால் உடலில் ரத்தத்தை தூய்மைப்படுத்தும்.
பொன்னாங்கண்ணிக் கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதே போல் இரும்பு சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை இதில் அதிக அளவில் உள்ளது.

பொன்னாங்கண்ணிக் கீரை ஆரோக்கியமான சருமத்தை தரும் சக்தி கொண்டது. பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து அழகு மேம்படும்.
பொன்னாங்கண்ணி கிரியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும். மேலும் பொன்னாங்கண்ணி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் மூளை புத்துணர்ச்சி பெறும்.
English Summary
Medicinal benefits of Ponnankanni keerai