மதுப்பிரியர்களே.! கல்லீரல் கொழுப்பை குறைக்கும் இந்த உணவுகள் உங்களுக்கு வரம்.!
Liver fat Clearing
கல்லீரலில் இருக்கும் கொழுப்பை கரைக்க சில எளிமையான உணவு பழக்கங்களை பார்க்கலாம்.
ஆப்பிள் வினிகரை உணவில் சேர்த்துக் கொள்வது கல்லீரலில் ஏற்படும் கொழுப்புகளை கரைக்க உதவும். இது உடல் எடையை குறைக்கவும் உதவும். வயிற்று வலி மற்றும் கல்லீரல் வீக்கம் இரண்டையும் இந்த ஆப்பிள் வினிகர் சரி செய்கிறது.
கிரீன் டீ அதிகப்படியான கேடசின் கொண்டுள்ளது. இது ஆல்கஹால் மற்றும் பிற கொழுப்புகள் கல்லீரலில் ஏற்படும் போது அதன் செயல்பாட்டை தடுக்கிறது. அன்றாடம் 3 முதல் 4 கப் கிரீன் டீ குடிப்பது நல்லது.

மஞ்சளில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன இது ஒரு சிறந்த ஆக்சிஜனேற்றி ஆகும். இதை சாப்பிடுவதால் கல்லீரல் இருக்கும் கொழுப்புகள் கரைந்து உடலின் ஜீரண திறன் அதிகம் படுகிறது. பாலில் கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து குடித்து வருவது நல்லது.
பப்பாளி மற்றும் அதன் விதைகளை கொண்டு கல்லீரலில் இருக்கும் கொழுப்பை குறைக்கலாம். பப்பாளி விதையை அரைத்து அதை தண்ணீரில் கலந்து குடிப்பது கொழுப்புகளை கரைக்க உதவும்.
ஆம்லாவில் வைட்டமின் சி இருக்கின்றது. எனவே, இதை தினமும் சாப்பிடுவதால் கல்லீரலில் தேங்கி இருக்கும் கொழுப்புகள் மற்றும் நஞ்சுகள் நீங்குகிறது. ஆனால், டைப் 2 டயாபட்டிக் நோயாளிகள் ஆம்லாவை எடுத்துக் கொள்வதில் கவனம் வேண்டும்.