நலன் தரும் முத்திரை.. சிறுநீரக பிரச்சனைகளை சரிசெய்யும் ஜலோதர நாசிக் முத்திரை..! 
                                    
                                    
                                   jalodara nashak mudra
 
                                 
                               
                                
                                      
                                            ஐந்து கைவிரல்களும் பஞ்சபூதங்களை குறிக்கும். இதனால், முத்திரைகள் செய்யும் போது உடலில் உள்ள பஞ்சபூதங்க சக்திகளை மேம்படுத்தும். தற்போது ஜலோதர நாசிக் முத்திரை பற்றி பார்போம்.
ஜலோதர நாசிக் முத்திரை:
முதலில் விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடி இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் சுண்டு விரலை மடித்து அதன் நகக்கண்ணில் கட்டை விரலை வைக்கவும். 

பின்பு மூச்சு பயிற்சி செய்யவும். இந்த முத்திரை காலை மாலை சாப்பிடும் முன் இரு வேளைகளும் செய்யவும். இந்த முத்திரை செய்வதன் மூலம் உடலில் உள்ள நீர் மூலங்களை சரிசெய்து சிறுநீரக பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்.