உங்கள் கருப்பையில் நீர்கட்டி இருக்கிறதா... அப்போ இந்த தப்புதான் நீங்க பண்ணி இருக்கீங்க...!
hydrocele in your uterus prevention and causes
கருப்பை நீர்க்கட்டி வராமல் தடுக்கும் முறைகள் :
அதிக அளவு எடை உள்ளவராக இருந்தால் உடலின் எடையைக் குறைக்க வேண்டும். நாள் தவறாத உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் அவசியம்.
தினமும் காலை அல்லது மாலை வேளையில் 2 முதல் 3 கி.மீ தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இயற்கை உணவுகளான காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும்.

கருப்பை நீர்கட்டி ஏற்படக் காரணங்கள் :
கருப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படுவது கருப்பை நீர்க்கட்டிகள் ஆகும். மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச்செய்கிறது.
அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. டெஸ்டோஸ்டிரான் அதிகரிப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது ஆகியவற்றால் கருப்பை நீர்கட்டி வர காரணமாகின்றன.
இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
English Summary
hydrocele in your uterus prevention and causes