சுவையான பாரம்பரியம் கொண்ட தயிர் ரசம் ரெசிபி செய்வது எப்படி?..! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தின் வாழ்க்கை ஓட்டத்தில் சாப்பிடுவதே பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அந்த வகையில், வீட்டில் எளிய முறையில், சுவையான பதத்தில் செய்யக்கூடிய தயிர் ரசம் ரெசிபியை செய்வது எப்படி என இன்று காணலாம். 

தயிர் ரசம் செய்ய தேவையான பொருள்கள் :

கெட்டித் தயிர் - 1 கிண்ணம்,
தண்ணீர் - 1/2 கிண்ணம்,
மஞ்சள் தூள் - 1/2 கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி தழை - சிறிதளவு.

தயிர் ரசம் வறுத்து அரைப்பதற்கு :

துவரம் பருப்பு - 1 கரண்டி,
தனியா - 1 கரண்டி,
மிளகு - 1 கரண்டி,
சீரகம் - 1 கரண்டி,

தயிர் ரசம் தாளிக்க :

எண்ணெய் - 1 கரண்டி,
மிளகாய் வத்தல் - 1,
கடுகு - 1 கரண்டி,
பெருங்காயத்தூள் - 1/2 கரண்டி,

தயிர் ரசம் செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட துவரம்பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் போன்றவற்றை மிக்சியில் அரைப்பத்தில் பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தயிர், தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு, பொடித்து வைத்துள்ள பிற பொடிகளை எடுத்து கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

இதன்பின்னர், அடுப்பில் வாணெலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தல், கடுகு, பெருங்காயத்தூளை சேர்த்து கடுகு வெடித்ததும் தயிர் கலவையை ஊற்றி கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து ரசம் போல நுரை வரும் முன்னர் இறக்க்கிவிடலாம். சுவையான தயிர் ரசம் தயார். இதனை சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Prepare Thayir Rasam Cooking Tips Tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->