குழந்தைகளை பழம் சாப்பிட வைக்க டிப்ஸ்.!  - Seithipunal
Seithipunal


பெரும்பாலும் அனைவரும் பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அதாவது, பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவார்கள்.

அடடா.... அதன் சுவையே தனி தான். அதுவும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு தூவி சாப்பிடும் சுவையே தனி தான்.

எனக்கு இது ரொம்பவும் பிடிக்கும். உங்களுக்கும் இது கண்டிப்பாக பிடிக்கும். ஆனால் நமக்கு தெரிந்து இவ்வாறு உண்பதால் சுவை அதிகரிக்கும். அதனாலயே நாம் இவ்வாறு சாப்பிடுகிறோம். 

ஆனால் இதில் வேறு பல நன்மைகளும் உள்ளன. அதாவது பழங்களில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் உள்ளன. 

நாம் உப்பு தூவி சாப்பிடுவதால் பழங்களை பிரஷ்ஷாகவும், அதில் உள்ள பாக்டீரியாக்கள் மேலும் வளராமலும் தடுக்கும்.

அதேபோல் உப்பு கலந்த நீரில் பழங்களை கழுவினால், பழங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

திராட்சை, ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் அசிட்டிக் அதிகமாக உள்ளது. அதேபோல் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. 

அதனால் இதனுடன் உப்பு சேர்த்துக் கொண்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்கும். அதேபோல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். 

குறிப்பாக பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களில் உள்ள புளிப்பு குறைவதோடு, பழங்கள் கனியாமல் இருந்தாலும் பச்சைப் வாசனை தெரியாது. 

உப்பானது உணவின் சுவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது உணவில் மட்டுமில்லாமல் பழங்களிலும் பயன்படுகிறது.

இவ்வளவு நன்மைகள் இருப்பது எல்லாம் நமக்கு தெரியாது, ஆனால் சுவைக்காக தான் நாம் இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம்.

எனவே புளிப்பு சுவையுடைய பழங்களை உப்பு தூவி உண்பது நல்லது. கழுவி உண்ணக்கூடிய பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் கழுவி உண்பது ஆரோக்கியமானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to kids eating food tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->