வெள்ளைப்பூண்டு - க்ரீன் டீ - சந்தனம் வைத்து என்ன செய்யலாம்?..!! - Seithipunal
Seithipunal


தினமும் படுக்கும் போது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள நீர்மமானது மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும். மேலும் பருக்களில் உள்ள கிருமிகளும் அழிந்து  பருக்களும் மறையும்.

சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.

வெள்ளைப் பூண்டினை எடுத்து அதன் தோலை உரித்தப் பின்னர் முகப்பரு உள்ள இடத்தில் வைத்து தேய்க்க வேண்டும். தினசரி பத்து நிமிடம் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மறையும்.

முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, வாரம் இருமுறை முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயித்தம் மாவு கலந்து முகத்தில் தடவி அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்துவந்தால் பருக்கள் மறையும்.

க்ரீன் டீயை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி முகப்பருக்களின் மீது வைத்து தேய்த்து வந்தால், க்ரீன் டீயானது பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து பருக்களை எளிதில் நீங்கச் செய்யும்.

பாதாம் எண்ணை பொதுவாகவே சர்மத்தை பாதுகாக்கும். இரண்டு மூன்று பாதாம் கொட்டைகளை அரைத்து தினமும் முகத்தில் தடவி வந்தால் பருக்கள், அதனால் உண்டான தழும்புகள் மறையும்.

இளநீர் பருத்தழும்புகளை போக்க வல்லது. தினமும் காலையிலும் மாலையிலும் முகத்தில் தடவிக் கொள்ளவும். நன்கு உலர்ந்ததும், தண்ணீரால் கழுவி விடவும்.

ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to improve health and beauty by nature


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal