பத்துநாளில் உடல் எடையை அதிகரிக்க,! இவ்வளவு எளிமையான வழி கிடைக்காது!! - Seithipunal
Seithipunal


என்ன தான் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென எக்சர்சைஸ், டயட், டேப்லெட் என பலர் இருந்தாலும், "எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறவே மாட்டேங்கிறது" என்று கவலைப்படுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு, உடல் எடைக் குறைவானவர்கள் விரைவில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி வேகமாக உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதைக் காண இயலும்.

வேர்க்கடலை : உடல் எடையைக் கூட்டுவதிலும், அழகான சதைப்பிடிப்பான உடலை வளர்க்கவும் மிக முக்கியமான உணவு வேர்க்கடலை ஆகும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த வேர்க்கடலையை உண்ண வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது கட்டாயம் உண்ண வேண்டும். 

இவ்வாறு, வேர்க்கடலையை தொடர்ந்து உண்ணுவதால் உடல் அதிகப்படியான வளர்ச்சி பெறும். மேலும், பாதாமிற்கு இணையான ஊட்டச்சத்தினைக் கொண்டிருப்பதனால் பாதாமின் சுவை பிடிக்காதவர்கள் இதனை முயற்சிக்கலாம்.

பால் : இதுக் கொழுப்புச் சத்து அதிகம் மிகுந்த உணவு என்பதால் இதனை எடுத்துக் கொள்ளலாம். காலை மற்றும் இரவு கட்டாயம் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். குறிப்பாக சுடவைத்த பாலில் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும். டீ அல்லது காபித்தூள் கலப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த டீ மற்றும் காபித்தூளை சேர்க்கும் பொழுது, பாலின் சத்து நமது உடலுக்கு கிடைப்பதில்லை, எனவே, அதை தவிர்க்க வேண்டும். 

இருவேளை மட்டுமல்லாமல் உடல் எடை விரைவாக அதிகரிக்க வேண்டுமென எண்ணுவோர் முடிந்த மட்டும் குடிக்கலாம். மேலும், ஒல்லியாக உள்ள பெண்களை அதிகம் ஆண்கள் விரும்புவதில்லை. திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் பாலை அதிகம் பருகுவதன் மூலம் நல்ல புஷ்டியான உடலமைப்பைப் பெருவதுடன், உடலில் பொலிவும் ஏற்படும்.

தயிர் : வாரத்தில் ஏழு நாட்களில் குறைந்தது 4 நாட்களாவது மதிய உணவில் தயிர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவும் கொழுப்பு நிறைந்த உணவென்பதால் உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.

வாழைப்பழம் : இது அதிகக் கலோரிகள் கொண்ட ஓர் உணவாகும். ஒரு நாளில் குறைந்த பட்சம் 2 வாழைப்பழமாவது உண்ண வேண்டும். ஒரு வாழைப்பழம் கட்டாயமாகும். உடல் எடை அதிகரிக்க விரும்புவோர் மூன்று வேளையும் உணவிற்கு பிறகு வாழைப்பழத்தை உண்பதை பழக்கப்படுத்திக் கொள்வது உடல் எடை அதிகரிக்க சிறந்த வழியாகும்.

உலர்திராட்சை : இதுவும் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவாகும். எனவே, மாலை நேர நொறுக்குத்தீனிக்கு பதில் இதனை பயன்படுத்தலாம்.

உளுந்து : என்ன தான் இட்லி, தோசை என அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலும், உளுந்தை ஊறவைத்து பச்சையாக சாப்பிடும் பொழுது நேரடியாக நமது உடலுக்கு சத்துக்கள் சென்றடைவதனால், உடல் எடை விரைவாக அதிகரிக்கும். அல்லது உளுந்தை கஞ்சியாக காய்ச்சி எடுத்துக் கொள்ளுவதும் சிறப்பு.

கீரை மற்றும் தானிய வகைகள் : முடிந்தளவு உணவுகளில் கீரை மற்றும் தானிய உணவுகளை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் எடையை அதிகரிக்கவும் இது உதவுகின்றது.

English Summary

how to gain our body weight


கருத்துக் கணிப்பு

இன்று நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம்?
கருத்துக் கணிப்பு

இன்று நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம்?
Seithipunal