கொலஸ்ட்ரால் பிரச்சினைக்கு அருமருந்தாகும் 'கலோஞ்சி' ..இதை எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா...?! - Seithipunal
Seithipunal


கொலஸ்ட்ரால் என்பது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்று தான். ஆனால் இதன் அளவு உடலில் அதிகரிக்கும் போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பல்வேறு அபாயங்களுக்கு வழிவகுக்கும். 

ரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டியது அவசியம். அந்த வகையில் கொலெஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் அருமருந்து தான் 'கலோஞ்சி' எனப்படும் 'கருஞ்சீரகம்'. 

கலோஞ்சியின் நன்மைகள் :

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கலோஞ்சியில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. மேலும் இதில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும். இதய தமனிகளில் படிந்துள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்றி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

மேலும் இந்த கருஞ்சீரகத்தின் எண்ணையை உணவில் சேர்த்துக் கொள்வதால், தமனிகளில் உள்ள கெட்ட கொழுப்பை  நீக்கி, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. வாரம் இரு முறை உணவில் இந்த கருஞ்சீரக எண்ணையை சேர்த்துக் கொள்ளலாம். 

மேலும் கருஞ்சீரகப் பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பதன் மூலமும் மாரடைப்பு அபாயம் நீங்கும். மேலும் கருஞ்சீரகத்தை தேனுடன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு, இதய நோய் அபாயங்கள் வெகுவாகக் குறையும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How To Eat Kalonji Seeds To Reduce Cholesterol


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->