சின்ன சின்ன வயிற்று வலி பின்னால் மறைந்திருக்கும் ஆபத்து...! – ஒட்டுகுடல் வீக்கம்...!
hidden danger behind minor stomach ache appendicitis
ஒட்டுகுடல் வீக்கம் ஏற்பட காரணங்கள் :
ஒட்டு குடல் என்பது நம் உடலின் அடிவயிற்றின் வலப்புறத்தில் ,(Right Lower Abdomen) உள்ளது. இந்த ஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்றது. இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்லும். ஒட்டுக்குடலானது உணவுப்பாதையில் சிறுகுடலும், பெருங்குடலும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
ஒட்டுக்குடலின் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ளலாம்.

ஒட்டுகுடலின் வாய் மூடப்படும் நேரத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு ஒட்டுக்குடலின் திசுக்கள் இறக்க நேரிடும். அதோடு உமிழ்நீர் போன்ற திரவமும், கிருமிகளும் சுரக்கப்பட்டு ஒட்டுக்குடல் வீங்குகிறது.
மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
ஒட்டுக்குடல் கண்டறிய உதவும் மருத்துவ ஆய்வுகள் :
ரத்த பரிசோதனை - ரெத்த வெள்ளையணுக்களின் ,(white blood cells -WBC) எண்ணிக்கை அதிகரிப்பு.
ஸ்கேன் - மீயொலி சோதிப்பான் கணினி கதிரியக்க சோதிப்பான்.
English Summary
hidden danger behind minor stomach ache appendicitis