உங்களுக்கு அக்கி(herpes zoster )வந்துடுச்சா.... அப்போ இதை follow பண்ணுங்க...!
herpes zoster
அக்கி ஏற்படக் காரணங்கள் :
அக்கி நோயை ஆங்கிலத்தில் ஹெர்பீஸ் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தந்து, தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ், செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும்.

அக்கி வந்தபின் காக்கும் முறைகள் :
இச்சமயத்தில் உடலுக்கு ஓய்வு தேவை.வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.மருத்துவரிடம் உடனடியாகக் காண்பிக்க வேண்டும்.வைட்டமின் பி அடங்கிய உணவை உண்ண வேண்டும்.முறையான சிகிச்சையில் இரண்டு வாரத்தில் கட்டுப்படுத்திவிடலாம்.திரவ உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.