சமைலறையில் இருக்கும் மருத்துவ மந்திரங்கள் என்னென்ன?..!   - Seithipunal
Seithipunal


திராட்சை பழத்தின் சாற்றை முகம் மற்றும் கழுத்தில் போட்டு., சுமார் 20 நிமி. நன்றாக ஊறவைத்த பின்னர் முகத்தை கழுவினால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.  மேலும்., தினமும் தொடர்ந்து செய்து வர சருமத்தில் வறட்சி ஏற்படுவதை குறைக்கலாம்.

பாதாம் பருப்பில் இருக்கும் சத்துக்களின் காரணமாக பெண்களுக்கு குழந்தை பிறப்பில் ஏற்படும் பிரச்னையை நீக்க முடியும். மேலும்., இது பெண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க சோயா பீன்ஸ் உதவுகிறது. சோயா பீன்ஸில் இருக்கும் உயர்தர புரதசத்துக்களின் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைக்க உதவுகிறது.

அதிமதுரம் பொடியுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து தினமும் இருமுறை பாலுடன் கலந்து குடித்து வர தாய்ப்பால் சுரப்பானது அதிகரிக்கும். குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள் வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் பொன்னிறமாக வதக்கி., அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர தாய்பால் நன்றாக சுரக்கும்.

பெண்களின் முகம் பொலிவு பெறுவதற்கு பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் தேய்த்து, சுமார் அரை மணி நேரம் ஊறவைத்த பின்னர் சுத்தமான நீரினால் முகத்தை கழுவினால் முகம் பொலிவுபெறும்.

சின்ன வெங்காயத்தை எடுத்து கொண்டு பசுவின் நெய்யில் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து., அந்த கலவையுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை மற்றும் மாலை ஒரு தே.கரண்டி சாப்பிட்டு வர அடிவயிறு சதையானது குறைந்து உடல் அழகு பெரும்.

c

காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருக்கும் சமயத்தில்., கடுக்காய் மற்றும் மஞ்சளை நன்றாக அரைத்து காதில் புண் இருக்கும் இடத்தில் பூசி வர புண் குணமாகும்.

தயிரை தலைக்குத் தேய்த்து ஊறவைத்து., சீயக்காய் தூள் போட்டு குளித்து வர முடி உதிரும் பிரச்சனை குறையும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு பிரச்சனையானது முற்றிலும் தீர்ந்துவிடும்.

பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்தவுடன் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால்., தாய்ப்பால் சுரப்பானது அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health tips in kitchen ingredient


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
Seithipunal