ஆரோக்கியமே அருமருந்து! நமது மூட்டுக்கு வலு சேர்க்கும் எட்டு வழிமுறைகள் இதோ...! - Seithipunal
Seithipunal


மூட்டுக்கு வலு சேர்க்கும் 8 வழிமுறைகள் 

  1. அழற்சி எதிர்ப்பு உணவுகள்: நாம் உட்கொள்ளும் ஒமேகா 3 சத்துக்கள் இருக்கும் மீன் வகைகள், வால்நட்ஸ் போன்ற உணவுகள், எலும்புக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமாக இருக்கும் பால் மற்றும் கீரை வகைகள், காய், பழங்கள் போன்ற அழற்சி எதிர்ப்புக்கு உதவும் உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வது எலும்புகளில் வரும் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது.

  2. காயப்டுத்தாதீர்கள்: நாம் வாழும் வாழ்க்கையில்,கவனக்குறைவால் நம்மை நாமே இடித்துக் காயப்படுத்திக் கொள்கிறோம். இதைத் தவிர, விளையாட்டுகளில் அதிக ஆர்வமுடையவர்களுக்குக் காயங்கள் என்றால் சகஜம். எனவே, அதற்குத் தேவையான பேடுகள், காலணிகளுடன் விளையாடுவது சிறந்தது.
  3. சரியான எடை: இதில் நமது வயது, உயரம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகமாக இருந்தால் இடுப்பு, மூட்டு என நம் உடலின் பாரத்தை தாங்கும் முக்கிய மூட்டுகளில் பிரச்னைகள் ஏற்படுவதோடு கீல்வாதம் ஏற்படும் என்பதால் சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
  4.  உடல் உழைப்பு அவசியம்: எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடலை எப்போதும் ஆக்டிவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எடைத் தூக்குவது போன்ற பளுவான பயிற்சிகள் செய்ய இயலவில்லை என்றால், சைக்ளிங், நடைப்பயிற்சி, ஜாக்கிங் என உடலுக்கு சிறிய அசைவுகள் கொடுத்துக்கொண்டே கூட ஆரோக்கியத்தை பேணலாம்.
  5. எலும்புகளுக்கு ஸ்ட்ரெஸ் கூடாது: நாம் நடக்கும்போதோ, நிற்கும்போதோ, உட்காரும்போதோ நம் உடலின் ஒரு பகுதிக்கு மட்டும் எடையை கொடுத்து சரிந்து நிற்பது விலா, இடுப்புப் பகுதிகளில் அதிக அழுத்தம் உருவாகக் காரணமாகின்றது. எனவே, நேராக நிறுத்திக்கொள்வது நல்லது.
  6. தண்ணீர்: நீர்தான் மனித உடல் இயங்குவதற்கு முக்கியமான காரணி என்பதால் உடலின் நீர்சத்து தேவையான அளவு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
  7. மன அழுத்தம்: மன அழுத்தம், மன வலுவோடு சேர்த்து உடல் வலுவையும் கெடுத்து விடும் என்பதால்  மெடிடேஷன், யோகா, மூச்சுப் பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி உடல் நலத்தைப் பேணலாம்.
  8. எலும்புக்கு வலு சேர்க்கும் உணவுகள்: கீரைகள், பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், மீன் வகைகள், பால், டோபு ஆகிய எலும்புக்கு வலு சேர்க்கும் உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Health is the best medicine Here are eight ways to strengthen our joints


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->