வெயில் காலத்தில் ஏற்படும் கருமையை போக்கி, பொலிவை பெற இதோ டிப்ஸ்!! - Seithipunal
Seithipunal


வெயில்காலத்தில் பொதுவாக நமக்கு முகப்பரு முக கருமை போன்றவை ஏற்படுவது வழக்கம். இதற்கு தீர்வு ஏற்படுத்த பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும். 

வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் அரிசி மாவு: 

வெள்ளரிக்காய் சாறு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் நனைத்து, அதன் பின் இந்த கலவையை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பின் மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் முகத்தைத் துடைத்து மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்கரப்பால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சரும நிறம் மேம்பட்டு காணப்படும்.

ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் லாவெண்டர் ஆயில்:

வேக வைத்த ஓட்ஸ் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
லாவெண்டர் ஆயில் – 3-4 துளிகள்

செய்முறை: ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி, மென்மையாக சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். 5 நிமிடம் கழித்து, முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து டோனர் எதையேனும் பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்கரப் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களையும் வெளியேற்றி, முகத்தை பளிச்சென்று காட்டும்.

ஸ்கரப் : தயிர், தேன் மற்றும் ஆளி விதை (Flax seed)ஆயில்:

தயிர் – 2 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
ஆளிவிதை ஆயில் – 2-3 துளிகள்

செய்முறை: ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன்பின் ஆயில்-ப்ரீ மாய்ஸ்சுரைசரை முகத்தில் தடவுங்கள். இந்த எளிய ஸ்கரப் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சுத்தமாக வைத்து, முகப்பரு வருவதைத் தடுக்கும்.

காபி தூள், கற்றாழை ஜெல் மற்றும் முல்தானி மெட்டி: 

காபி தூள் – 1/2 டீஸ்பூன்
முல்தானி மெட்டி – 1/2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் – 2-3 டீஸ்பூன்

ஒரு சிறிய பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவி, முகத்தை துணியால் துடையுங்கள். இறுதியில் ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுங்கள்.

மேலும், பல குறிப்புகளுக்கு: அழகு குறிப்பு க்ளிக் செய்யவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

face Beauty tips in tamil


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal