தினமும் சாப்பாட்டில் பாசிப்பயறு சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா.?!
Eating pacha payiru everyday with benefits in tamil
பச்சை பயிரின் நன்மைகள்:
பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் உண்டு.
துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும்.
ரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.
பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின் பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும்.
பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்துணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிற்றுக் கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப் பயிறு வேகவைத்த, தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிறு ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில், பாசிப்பயறு சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது.
மணத்தக்காளி கீரையோடு, பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால், வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால், நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
பச்சைப் பயறின் தன்மை ஈரலின் பிரச்சினையை அதிகமாக்கும்.
எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் பச்சைப் பயறை வேக வைத்து அந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
பச்சைப் பயறை அதிகம் சாப்பிட்டால் உடல் அதிக குளிர்ந்த தன்மையை அடைந்துவிடும். எனவே ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோயுள்ளவர்கள் கவனமாக கையாள வேண்டும்.
குளிக்கும் போது பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்
English Summary
Eating pacha payiru everyday with benefits in tamil