ஏன் இந்த மாத்திரைகளை வெண்ணீரில் சாப்பிடக்கூடாது தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


காப்ஸ்யூல் மாத்திரைகளை வெந்நீரில் சாப்பிடக்கூடாது ஏன்?

பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல ஒரு கருவியாக இருப்பவை தான் திரவ பொருட்கள்.

இதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை நாம் பயன்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு காப்ஸ்யூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீருடன் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். ஆனால், இது எல்லா வகை மாத்திரைகளுக்கும் உகந்தது அல்ல.

சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரை நாம் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக காப்ஸ்யூல் வகை மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி நாம் குடித்து வந்தால் அவை நாக்கில் ஒட்டி கொள்ளும்.

பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் வகை மாத்திரைகள் விரைவில் கரைய வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மேலும், தொண்டையில் வலி, இருமல் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வெந்நீருடன் எடுத்து கொள்ளலாம்.

பலர் மாத்திரைகளை அப்படியே சாக்லேட் போன்று சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு சாப்பிடுவது தவறு. மாத்திரை சாப்பிடும் போது போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும்.

இல்லையெனில் வாயில் இருந்து வயிற்று பகுதிக்கு அவை செல்லாது. இதனால் அஜீரண கோளாறு ஏற்பட்டு, மாத்திரையும் சரியாக தனது வேலையை செய்ய இயலாது.

சாப்பிட்ட அடுத்த நொடியே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், அப்படி மாத்திரைகளை எடுத்து கொள்வது மோசமான விபரீத நிலையை நமக்கு தந்து விடும்.

ஆதலால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடம் கழித்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது.

எப்போது மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் அவற்றை அதிக சூடும், அதிக குளிர்ந்த தன்மையும் இல்லாத மிதமான நீரை பயன்படுத்தி சாப்பிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dont eat capsuls tablet with Hot water


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->