உங்களுக்கு சிறுநீர் கற்கள் வர காரணம் மற்றும் அதன் வகைகள் தெரியுமா?
Do you know causes and types urinary stones
சிறுநீர் கற்கள் என்றால் என்ன?
சிறுநீரகக் கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும். சிறுநீரகத்தில், சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்று திரண்டு பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப்பாதையில் கற்கள் உருவாகக்கூடும்.
சிறுநீர் கற்கள் ஏற்படக் காரணங்கள்
சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் குழாய் வழியாக கீழ்நோக்கி நகரும்போது வலியினை ஏற்படுத்தும். இவ்வலியானது, அடிக்கடி பின்புற விளாவின் இரண்டு பக்கங்களிலும் ஆரம்பித்து கீழ்நோக்கி நகரும்.
இவ்வாறான அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

சிறுநீரக கற்களின் வகைகள்
கால்சியம் கற்கள்
இவை அதிகமாக ஏற்படக்கூடியவை. அவை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். சாதாரணமாக 20 வயது முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படும். திரும்பத் திரும்பத் ஏற்படும் தன்மையுடையது. கால்சியம், ஆக்ஸலேட், பாஸ்பேட் அல்லது கார்போனேட் போன்றவையுடன் சேர்ந்து கற்களை உண்டாக்கும்.
யூரிக் அமில கற்கள்
இக்கற்கள் அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படும்.
ஸ்ட்ருவைட் கற்கள்
மெக்னீஸியம் அமோனியம் அல்லது பாஸ்பேட் படிகங்கள் ஏற்படும் கல். ஸ்ட்ருவைட் கற்கள் என்பது முக்கியமாக பெண்களில் சிறுநீர் குழாய் சம்பந்தமான தொற்று நோய் கண்டதினால் ஏற்படக்கூடியவை. அவை மிகப்பெரியதாக வளரக் கூடியவை. மேலும் சிறுநீரகங்கள், சிறுநீர்குழாய் அல்லது சிறுநீர் பையில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியவை.
English Summary
Do you know causes and types urinary stones