டீவி ஓடும் பொழுது இதை செய்து விடாதீர்கள்.! எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் பெண்களின் உடல் நலம், மார்பக புற்று நோய் மற்றும் இதர நோய்கள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. 43,722 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இதில் 35 முதல் 74 வயது வரையிலான பெண்கள் உட்படுத்தப்பட்டனர். 

அவர்களிடம் இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா? சிறிய அளவிலான விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா? டி.வி.யை ஓடவிட்டு தூங்குவீர்களா? அல்லது வெளிச்சம் எதுவுமின்றி உறங்குவீர்களா? என கேள்விகள் கேட்கப்பட்டன.

Image result for sleeping seithipunal

அதில் இருட்டு அறையில் தூங்கும் பெண்களை விட டி.வி.யை ஒட விட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கும் பெண்கள் அதிக உடல் எடையுடன் இருந்தனர்.டி.வி.யில் இருந்து வெளியாகும் செயற்கை வெளிச்சம் தாக்கத்தை ஏற்படுத்தும் மெலாடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. 

இதனால் தூக்கம் குறைந்து உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது.இதன் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடலில் பல்வேறு நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do not sleep when watching tv


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->