கொரோனாவின் 3-வது அலை குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் வெளியிட்ட தகவல்.!! - Seithipunal
Seithipunal


கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்குமா.? என்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் ரந்தீப் குலேரியா நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, பூஞ்சை நோய்களை அவற்றின் நிறங்கள் அடிப்படையில் கருப்பு, வெள்ளை, மஞ்சள் என்று வகைப்படுத்துவது குழப்பத்தை உருவாக்குகிறது. ஏனென்றால் ஒரு வையனை புஞ்சை வெவ்வேறு நிறத்தில் காணப்படுகிறது. எனவே நிறத்தின் அடிப்படையில் கூறாமல், பெயர் அடிப்படையில் புஞ்சையை குறிப்பிடுவதே நல்லது. ஆக்சிஜன் சிகிச்சைக்கும், கருப்பு பூஞ்சை வருவதற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. என்றால் வீட்டில் ஆக்சிஜன் உதவியின்றி சிகிச்சை பெறுபவர்களுக்கும் கருப்பு பூஞ்சை வருகிறது. இதற்கு உறுதியான தொடர்பு இல்லை. 

கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கோ, அதிகமான குழந்தைகளை தாக்கும் என்பதற்கும் ஆதாரமில்லை. முதல் இரண்டு அலைகளை எடுத்துக் கொண்டால் ஒரே மாதிரிதான் இருக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பாகவே உள்ளனர். அவர்களை தாக்கினால் கூட லேசானா தொற்றாகவே. வைரசில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், குழந்தைகளை அதிகமாக தாக்க வாய்ப்பில்லை என கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director of delhi aiims press meet


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->