டயாபட்டிக் நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்.! - Seithipunal
Seithipunal


டயாபட்டிக் எனப்படும் நீரழிவு நோய் உள்ளவர்கள் கீழ்க்கண்ட உணவு வகைகளை  கட்டாயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவை என்னென்ன உணவுகள் என்று பார்ப்போம் .

டயாபட்டிக் நோயாளிகள்  சோடாக்கள்  மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட  பழச்சாறுகளை  தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளதால்  இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். மேலும், இவற்றில் உள்ள பிரக்டோஸ் ஆனது, உடலில்  இன்சுலின்  சுரப்பை தடுக்கிறது . இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

வெள்ளை நிற பிரட், பாஸ்தா மற்றும் அரிசி ஆகியவற்றில் நார்ச்சத்து குறைவாகவும்  கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும் உள்ளன.  இவற்றையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்த்துக் கொள்வது நலம்.

இப்போது நிறைய சுவையூட்டப்பட்ட  தயிர் என்று கடைகளில் கிடைக்கிறது. அதில் கொழுப்புச்சத்து குறைவாக இருந்தாலும் சர்க்கரை அதிகமாக இருக்கும், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால். அதனால் இவற்றையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

சுவையூட்டப்பட்ட காபி பானங்களில்  சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால்  இவற்றைத் தவிர்த்தலும் நலம்.

உலர்ந்த பழங்களில் அதிக அளவு சர்க்கரை போடப்படுகின்றன. இதனால் இவற்றில் மற்ற பழங்களை விட நான்கு மடங்கு  கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக உலர் பழங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Diabetes patients must avoid this foods


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->